ஊட்டியில் அதிகாரிகள் கலக்கம் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஆபீசில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு: கணக்கில் வராத ரூ.80 ஆயிரம் சிக்கியது

ஊட்டி: ஊட்டியில் உள்ள பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத ரூ.80 ஆயிரத்து 190  சிக்கியது. நீலகிரி மாவட்டம் ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள கூடுதல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகம் உள்ளது. இங்கு பேரூராட்சிகளின் உதவி இயக்குநராக கனகராஜ் உள்ளார். இந்நிலையில், நேற்று பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் கூட்டம் நடந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சுபாஷினி தலைமையில் போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.80 ஆயிரத்து 190 பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் எப்படி வந்தது என்பது குறித்து அதிகாரிகளிடம் 2 மணி நேரம் விசாரணை நடந்தது. இது குறித்து வழக்குப்பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊட்டியில் உள்ள பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தியது மற்ற அரசு அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

More
>