அனைத்து துறைகளையும் ஒரே குடையில் இணைக்கும் ரூ.100 லட்சம் கோடி செலவில் கதி சக்தி திட்டம் தொடக்கம்: நாட்டின் வளர்ச்சி வேகம் அதிகமாகும் - மோடி

புதுடெல்லி: அனைத்து துறைகளையும் ஒரே குடையின் கீழ் இணைத்து வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தும் வகையில் ரூ.100 லட்சம் கோடி மதிப்பிலான ‘கதி சக்தி’ தேசிய மாஸ்டர் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.

நாட்டின் வளர்ச்சி திட்டங்களை வேகமாக செயல்படுத்துவதற்காக, அனைத்து துறைகளையும் ஒரே குடையின் கீழ் இணைக்க, ரூ.100 லட்சம் கோடி செலவில் ‘கதி சக்தி’ என்ற திட்டம் அமல்படுத்தப்படும் என கடந்த சுதந்திர தின உரையில் மோடி அறிவித்தார். அதன்படி, நேற்று இந்த திட்டத்தை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது: கதி சக்தி திட்டத்தின் மூலம் அனைத்து துறைகளையும் ஒரே குடையின் கீழ் இணைப்பதன் மூலம் செயல்திறன் அதிகரிக்கும். கடந்த காலங்களில் வரிப்பணம் வளர்ச்சிப் பணிகளுக்கு மிக அலட்சியமாக பயன்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் தளவாட செலவுகளை குறைப்பது தான். எனவே, ஒரே குடையின் கீழ் அனைத்து துறைகளும் இணைவதால் வளர்ச்சி அதிக சக்தியும், வேகமும் பெறும். இதனால், இந்தியா மிகவும் கவர்ச்சிகரமான முதலீட்டு இடமாக மாறும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

Related Stories: