×

கோயில் திருவிழாவையொட்டி மாடுகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி: நத்தம் அருகே நடந்தது

நத்தம்: கோயில் திருவிழாவையொட்டி, நத்தம் அருகே செந்துறையில் மாடுகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி நடந்தது. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே செந்துறை பெரியூர்பட்டியில் மந்தையம்மன் கருத்தநாயக்கர் மந்தை கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழாவையொட்டி  பக்தர்கள்  கடந்த 5ம் தேதி காப்பு கட்டி விரதம் தொடங்கினர். தொடர்ந்து 8 நாட்கள் திருவிழா நடைபெறும். விழா முக்கிய நிகழ்ச்சியாக நேற்று  மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் 96 கிராமங்கள் 18 பட்டிக்கு கட்டுப்பட்ட ராஜகம்பளத்து நாயக்கர் இன மக்கள் வளர்க்கும் சாமி மாடுகள் கலந்து கொண்டது.  இந்த மாடுகளை கோயில் முன்பு  நிறுத்தி வைத்து முறைப்படி விசேஷ பூஜைகள் செய்தனர். பின்னர் பக்தர்கள் காலணியின்றி, கரடு முரடான பாதைகளில் சுமார் 1கிமீ தூரம்   மாடுகளுடன் ஓடி வந்து, கோயில் முன் போட்டிருந்த வெள்ளை துணியை மாடுகளை தாண்ட செய்தனர். தொடர்ந்து விழாவில் பங்கேற்ற மாடுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் ராஜகம்பளத்து நாயக்கர் இன மக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Satham , Cow evening crossing for the temple festival: took place near Natham
× RELATED தமிழ்நாட்டில் 14 இடங்களில் வெயில் சதம்: வானிலை ஆய்வு மையம் தகவல்