பூந்தமல்லி ஒன்றியத்தில் ஒரு ஓட்டுக்கூட வாங்காத சுயேட்சை

பூந்தமல்லி: பூந்தமல்லி ஒன்றியத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் ஒரு வாக்குக்கூட வாங்காதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பூந்தமல்லி ஒன்றியம், நெமிலிச்சேரி ஊராட்சி வார்டு உறுப்பினர் வாக்கு எண்ணிக்கை நேற்று முடிந்தது. திமுக கூட்டணியை சேர்ந்த மதிமுக வேட்பாளர் 171 வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் ஜானகிராமனுக்கு ஒரு ஓட்டுகூட கிடைக்கவில்லை. இதனால் அதிகாரிகள் ஆச்சரியம் அடைந்தனர். இதுகுறித்து ஊழியர்கள் தெரிவித்தபோது, ‘’சுயேட்சை வேட்பாளர் தன்னுடைய ஓட்டைக்கூட போடவில்லை எனத் தெரியவந்தது. அவரது குடும்பத்தினரும் ஓட்டு போடவில்லை என்றனர்.

Related Stories:

More
>