×

ஊரக உள்ளாட்சி தேர்தலில் காஞ்சி.- செங்கல்பட்டு மாவட்டத்தில் வெற்றி வாகை சூடியவர்கள் விவரம்

சென்னை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிப்பெற்றவர்களின் விவரம் வருமாறு; சித்தாமூர் ஒன்றியம்: 11வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் செந்தமிழ் ஆனந்தன் வெற்றி. 12வது வார்டில் சரஸ்வதி (எ) தமிழினி ( விசிக) வெற்றி. வெண்பேடு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அதிமுகவை சேர்ந்த குமரேசன் வெற்றிப்பெற்று  உள்ளார். காயார் ஊராட்சியில் அதிமுக ரமேஷ் வென்றுள்ளார். திருக்கழுக்குன்றம் 7வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக அதிமுக எஸ்வந்த் ராவ் வெற்றிப்பெற்றுள்ளார்.

8 வது வார்டு மாவட்ட  கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட ஆர்.கே.ரமேஷ் வெற்றிப்பெற்றார். 9வது வார்டில் திமுகவை சேர்ந்த சரஸ்வதி பாபு வெற்றிப்பெற்றார். 10வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் சஞ்சய் வெற்றிப்பெற்றார். இருப்பினும் இங்கு மறு கூட்டல் நடத்தப்படுகிறது. 11வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக திமுகவை சேர்ந்த ஜெயபால் வெற்றிப்பெற்றிருக்கிறார். புதுப்பாக்கம் ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. திருப்போரூர் ஒன்றியம் 7வது வார்டு ஒன்றிய கவுன்சிலருக்கு போட்டியிட்ட பாமகவை சேர்ந்த அருண்குமார் வென்றுள்ளார்.

திருக்கழுக்குன்றம் 11 வது வார்டு மாவட்ட கவுன்சிலர் 5  வது சுற்று முடிவில் அதிமுக வை விட 1500 வாக்குகள் அதிகம் பெற்று திமுக  முன்னிலை வகிக்கிறார். தையூர் ஊராட்சி தலைவராக எஸ்.குமரவேல் அதிமுக  வெற்றிப்பெற்றார். கேளம்பாக்கம் ஊராட்சி தலைவர் எல்லப்பன் திமுக வெற்றி.  கேளம்பாக்கம் ஒன்றிய கவுன்சிலராக திவ்யா வினோத் கண்ணன் அதிமுக  வென்றுள்ளார்.

குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம்:
கெருகம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக அதிமுகவை சேர்ந்த ஜெகதீஸ்வரி சுந்தரேசன் வெற்றிப்பெற்றுள்ளார். இங்குள்ள 21 வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவியில் 2,3,4,5,6,7,11,12,13,14 ஆகிய 11 வார்டுகளில் திமுகவும் 1, 8 ஆகிய வார்டுகளில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. மணிமங்கலம் ஊராட்சி 16வது வார்டில் திமுகவை சேர்ந்த குமுதா சுமன்  வெற்றிப்பெற்றார். மணிமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரா.ஐயப்பன் வெற்றி பெற்றுள்ளார். 9 வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக திமுகவை சேர்ந்த சுதாகர் வென்றார்.

திருப்போரூர் ஒன்றியம் 4வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் சுயேட்சை வேட்பாளர் ராஜேஷ் வெற்றிப் பெற்றிருக்கிறார். இங்குள்ள 2 வார்டுகளில் அதிமுக முன்னிலையில் உள்ளது.
குன்றத்தூர் ஒன்றியம் எழுச்சூர் 20வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட ராஜேந்திரன் (திமுக) வெற்றி பெற்றுள்ளார். 3வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அன்பழகன் (திமுக) வெற்றிப்பெற்றார். படப்பை ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கர்ணன் (திமுக) வெற்றிப்பெற்றார். வைப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுகவை சேர்ந்த சுமதி ராமச்சந்திரன் வென்றுள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் வெற்றிப்பெற்ற கவுன்சிலர்கள் விவரம்;
1வது வார்டு ஹேமாவதி-திமுக, 2 வது வார்டு தியாகராஜன்-சுயேச்சை, 3வது வார்டு சாந்தகுமாரி-அதிமுக, 4வது வார்டு சத்யா-அதிமுக, 5வது வார்டு செந்தில்ராஜன்-அதிமுக, 6வது வார்டு நிஷாந்த்-அதிமுக, 7வது வார்டு எல்லம்மாள்-சுயேச்சை, 8வது வார்டு கருணாநிதி-திமுக, 9வது வார்டு உஷா திமுக, 10வது வார்டு ஆண்டனி வினோத்குமார்-திமுக, 11வது வார்டு உறுப்பினர் வானிஸ்ரீ-காங்கிரஸ், 12வது வார்டு யுவராணி-அதிமுக, 13வது வார்டு உறுப்பினர் மல்லிகா-திமுக, 14வது வார்டு உறுப்பினர் மாலதி-திமுக, 15வது வார்டு உறுப்பினர் கோமதி (திமுக), 8வது வார்டு பச்சையப்பன் (திமுக) வென்றுள்ளார்.

3வது வார்டு மாவட்ட கவுன்சிலராக குண்ணம் ராமமூர்த்தி (திமுக), 4வது வார்டு பாலா (எ) பால்ராஜ் (திமுக) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். ஆதனூர் ஊராட்சிமன்ற தலைவராக திமுகவை சேர்ந்த தமிழ்அமுதனும் ஆதனூர் ஊராட்சி 12வது வார்டுக்கு அவரது மனைவி மலர்விழிதமிழ் அமுதனும் வெற்றிப்பெற்றனர். சித்தாமூர் ஒன்றியம் 16 வது வார்டு மாவட்ட கவுன்சிராக திமுகவை சேர்ந்த சாந்தி ரவிகுமார் வெற்றிப்பெற்றார். அய்யப்பன்தாங்கல் ஊராட்சி மன்றத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட கல்யாணி பெரியநாயகம் வெற்றிப்பெற்று உள்ளார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஜெமீலா பாண்டுரங்கன், 4620 வாக்குகள் பெற்ற நிலையில், திமுக வேட்பாளரைவிட கூடுதலாக 95 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், திமுக சார்பில், மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அய்யப்பன்தாங்கள் ஊராட்சி தலைவர் பதவிக்கு மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் வடக்குப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவராக நந்தினிமேத்தா வசந்தகுமார் (அதிமுக) 625 வெற்றிப்பெற்றார்.

ஒரத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக வள்ளி சுந்தர்(திமுக) வெற்றிப்பெற்றிருக்கிறார். சித்தாமூர் ஒன்றியம் 13வது ஒன்றிய கவுன்சிலர் ஜீவா பூலோகம் (திமுக) வெற்றிப்பெற்றார். இலத்தூர் ஒன்றியம் மாவட்ட கவுன்சிலர் பதவியை திமுக பிடித்துள்ளது. இங்கு மொத்தம் 15 ஒன்றிய கவுன்சிலர்கள். இதில் திமுக 8, அதிமுக 5 இடத்தில் வென்றுள்ளது. 2 ஒன்றிய கவுன்சிலர் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் திமுக முன்னிலை வகிக்கிறது. சித்தாமூர் ஒன்றியம் 14வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் திமுகவை சேர்ந்த பாரதி காண்டீபன் வெற்றிப்பெற்றார். 15வது ஒன்றிய கவுன்சிலர் கன்னியப்பன் (திமுக) வென்றிருக்கிறார்.

16 வது ஒன்றிய கவுன்சிலர் பிரேமாசங்கர் (திமுக) வெற்றிப்பெற்றார். செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 16 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 1வது வார்டு திமுக ஏழுமலை, 2வது வார்டு திமுக ஜனனி, 3வது வார்டு அதிமுக குணசேகரன், 4வது வார்டு திமுக நாகப்பன், 5வது வார்டு திமுக ரேவதி, 6வது வார்டு திமுக குப்பன், 7வது வார்டு அதிமுக கிரிஜா, 8வது வார்டு விசிக மோகன்ராஜ், 9வது வார்டு அதிமுக ப்ரவின்குமார், 10வது வார்டு திமுக இனியமதி கண்ணன், 11வது வார்டு காங்கிரஸ் செந்தமிழ் ஆனந்த் , 12வது வார்டு விசிக சரஸ்வதி தமிழினி, 13வது வார்டு திமுகவை ஜீவா பூலோகம், 14வது வார்டு திமுக பாரதி கான்டீபன்,

15வது வார்டு திமுக கண்ணியப்பன், 16 வது வார்டு திமுக பிரேமா சங்கர் வெற்றிப்பெற்றனர். மாவட்ட கவுன்சிலர் 14 வது வார்டில் திமுக வெற்றிப்பெற்றது. உத்திரமேரூர் ஒன்றியம் 22 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுகவினர் 18 இடங்களில் வெற்றிப்பெற்றுள்ளனர். அதிமுக 3 இடங்களை கைப்பற்றியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 இடம் வந்துள்ளது. இங்கு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 2 இடத்திலும் திமுக வெற்றிப்பெற்றிருக்கிறது. காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 12 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு விசிக வேட்பாளர் ரேகா ஸ்டான்லி  வெற்றிப்பெற்றிருக்கிறார். காஞ்சிபுரம் ஒன்றியம் 11வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவியை பாஜ பிடித்துள்ளது.

Tags : Sengalupu District , Kanchi in the local government elections.- Details of the winners in Chengalpattu district
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும்...