×

பெங்களூருவில் ஆபத்தான நிலையில் இருந்த 3 மாடி கட்டிடத்தை பாதுகாப்பாக அகற்றிய அதிகாரிகள்!: குடியிருப்பு வாசிகள் நிம்மதி..!!

பெங்களூரு: பெங்களூருவில் ஆபத்தான நிலையில் இருந்த 3 மாடி கட்டிடத்தை பொதுமக்களுக்கு பாதிப்பின்றி அதிகாரிகள் முழுமையாக அகற்றியுள்ளனர். பெங்களூரு மெஜிஸ்டிக் ரயில் நிலையம் அருகே உள்ள கமலா நகர் பகுதியில் 3 மாடி கட்டிடம் ஒன்றின் கீழ் பகுதியில் உள்ள தூண் நேற்றிரவு இடிந்து விழுந்தது. இதையடுத்து எந்நேரம் வேண்டுமானாலும் கட்டிடம் இடிந்து விழக்கூடும் என்ற நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இணைந்து அப்பகுதியில் குடியிருந்த மக்களை பாதுகாப்பாக வெளியேற்றினர்.

அனைவரும் வெளியேறிய நிலையில், யாருக்கும் பாதிப்பு இன்றி பின்புறம் இருந்த கால்வாயில் கட்டிடத்தை மாநகராட்சி பொறியாளர்கள் முழுமையாக இடித்து தள்ளினர். 3 மாடி கட்டிடம் முழுமையாக இடித்து தள்ளப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது, 3 மாடி கட்டிடம் சாய்ந்து விழும் நேரடி காட்சிகள் வெளியாகியுள்ளது.


Tags : Bangalore , Bangalore, 3 storey building, demolition
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...