×

மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய தலைவரை தேர்ந்தெடுப்பதில் திமுக- அதிமுக இடையே போட்டா போட்டி: வெற்றி பெற்ற சுயேட்சைகளுக்கு மவுசு

சென்னை: மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய தேர்தலில் தலைவரை தேர்ந்தெடுப்பதில் திமுக- அதிமுக இடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. இரண்டும் சமபலத்தில் இருப்பதால் வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர்களுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. செங்கல்பட்டு மாவட்டத்துக்குட்பட்ட மதுராந்தம் ஊராட்சி ஒன்றியத்துக்கான தேர்தல் முதல் கட்டமாக கடந்த 6ம்தேதி நடைபெற்றது. இதில் 89 சதவீத வாக்குகள் பதிவாகின. மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 22 ஒன்றிய குழு உறுப்பினர்கள் இந்த ஊராட்சி ஒன்றிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும்.

இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முதல் நடந்து வருகிறது. 22 ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் இதுவரை 21 ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், திமுக 9 வார்டுகளிலும், அதிமுக 8 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 4 சுயேட்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் திமுக- அதிமுக இரு கூட்டணி கட்சிகளும் சம பலத்தில் இருக்கிறது. இன்னும் ஒரு வார்டுக்கான முடிவு அறிவிக்கப்படவில்லை.

 மொத்தம் உள்ள 22 வார்டுகளில், இரு கட்சிகளும் சமபலத்தில் இருக்கும் நிலையில், சுயேட்சைகள் 4 பேர் வெற்றி பெற்றுள்ளனர். மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய தலைவரை தேர்வு செய்ய வேண்டுமானால் இந்த சுயேட்சைகள் யாருக்கு ஆதரவு அளிப்பார்கள் என்பது தான் முக்கியம். அவர்கள் யாருக்கு ஆதரவு கொடுக்கிறார்களோ அவர்கள் தான் ஊராட்சி ஒன்றிய தலைவராக தேர்வு செய்யப்படுவார்கள். எனவே, திமுக- அதிமுக இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவி திமுகவுக்கா அல்லது அதிமுகவுக்கா என்பதை சுயேட்சைகள் 4 பேர் தான் தீர்மானிக்க முடியும் என்பதால் இவர்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. அவர்கள் 4 பேரும் இணைந்து எந்த கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கிறார்களோ அவர்கள் தான் ஊராட்சி ஒன்றிய தலைவராக தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய தலைவரை தேர்வு செய்வதில் இரு கட்சிகளுக்கு இடையே கடும் இழுபறி ஏற்பட்டுள்ளது.

Tags : Timu ,Exponential ,Union ,Madurandam Municipal Municipal , DMK-AIADMK contest in Madurantakam Panchayat Union polls
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு...