மதுரையில் இருந்து முதல் முறையாக திருப்பதிக்கு விமான சேவை!: பத்தர்கள் கோரிக்கையை ஏற்றது இண்டிகோ நிறுவனம்..!!

டெல்லி: பக்தர்கள் கோரிக்கை ஏற்று அடுத்த மாதம் 19ம் தேதி முதல் மதுரையில் இருந்து முதல் முறையாக திருப்பதிக்கு விமான சேவை தொடங்கவுள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது. மதுரை விமான நிலையத்திலிருந்து மதியம் 3.00 மணிக்கு புறப்படும் விமானம், மாலை 4.20 மணிக்கு திருப்பதி விமான நிலையத்தை அடையும். அதேபோல் திருப்பதி விமான நிலையத்தில் இருந்து மாலை 4.40 மணிக்கு புறப்படும் விமானம் மதுரை விமான நிலையத்திற்கு 6.40 மணிக்கு வந்து சேரும் எனவும் இண்டிகோ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மதுரையில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு தினந்தோறும் இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா விமான நிறுவனங்கள் மட்டுமே தங்களின் சேவையை வழங்கி வருகின்றன.

இந்த நிலையில் மதுரையில் இருந்து திருப்பதிக்கு விமான சேவை வழங்கப்பட வேண்டும் என விமான பயணிகள் மற்றும் திருப்பதி ஏழுமலையான் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இதை பூர்த்தி செய்யும் வகையில் அடுத்த மாதம் 19ம் தேதி முதல் மதுரையில் இருந்து திருப்பதிக்கு விமானம் இயக்கப்பட உள்ளதாகவும் தினமும் 2 விமான சேவையை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் இண்டிகோ நிறுவனம் கூறியுள்ளது. இதற்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இண்டிகோ நிறுவனத்தின் இத்தகைய அறிவிப்பு விமான பயணிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

Related Stories:

More
>