தமிழ்நாட்டிற்கு ஒளிமயமான எதிர்காலம் உள்ளது : திமுகவின் அமோக வெற்றி குறித்து கே.எஸ். அழகிரி ட்வீட்!

சென்னை : ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி நிலையில் தமிழகத்திற்கு ஒளிமயமான எதிர்காலம் அமையவிருப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த அக்.6 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெற்றது.இந்த இருகட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 74 மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தேர்தல் முடிவுகளின்படி, பெரும்பாலான இடங்களில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள பதிவில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் வெற்றி மூலமாக தமிழகம் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் தடையின்றி பயணம் செய்வதற்கான வாய்ப்பு அருமையாக அமைந்திருக்கிறது. இதன்மூலம் தமிழகத்திற்கு ஒளிமயமான எதிர்காலத்தை அமைக்கிற பணியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடர்ந்து செயல்படுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

More
>