கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு கோயில் அர்ச்சகர்கள் மலர் அபிஷேகம்: வீடியோ வைரலால் பரபரப்பு

கும்பகோணம்: கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவருக்கு பட்டீஸ்வரம் கோயில் அர்ச்சகர்கள் மலர் அபிஷேம் செய்த வீடியோ வைரலாக பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன். இவர், தொடர்ந்து 5 ஆண்டுகள் கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலராக பதவி வகித்தார். இதையடுத்து கடந்த சில வருடங்களுக்கு முன் கடலூரில் வட்டார போக்குவரத்து அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் யாரும் எதிர்பாராத நிலையில் முக்கண்ணனை, தமிழக அரசின் போக்குவரத்து துறையானது கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலராக மீண்டும் நியமனம் செய்தது. எனவே அவரது ஆதரவாளர்கள் முக்கண்ணனை அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வந்தனர். இதனை தொடர்ந்து கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரம் கோயில் அர்ச்சகர் ரமேஷ் தலைமையில் அர்ச்சகர்களும், ஊழியர்களும் முக்கண்ணனை கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் திருப்பதி ஏழுமலையான் போல் அலங்காரம் செய்தும், மிகப்பெரிய மாலைகளை அணிவித்தும், அவருக்கு வேதங்களை சொல்லியும் மலர் அபிஷேகம் செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories:

More