உதகையில் தனியார் உரக்கிடங்கில் அதிகாலையில் பயங்கர தீ விபத்து

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் தனியார் உரக்கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகி இருக்கின்றன. உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே தனியார் ரசாயன உர விற்பனை மற்றும் சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு காய்கறி விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இங்கு அதிகாலை திடீரென்று பற்றிய தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியதால் பயங்கர புகைமூட்டம் ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்தில் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான காய்கறி விதைகள், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் எரிந்து சேதமாகியுள்ளன. முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

Related Stories:

More
>