நாகை அருகே சி.பி.சி.எல். எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 40 கிராமங்களில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்..!!

நாகை: நாகை அருகே சி.பி.சி.எல். எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து 40 கிராமங்களில் கருப்பு கொடி ஏற்றிய விவசாயிகள் வாகன விழிப்புணர்வு பேரணியும் நடத்தி எதிர்ப்புகளை பதிவு செய்தனர். கடந்த 1992ம் ஆண்டில் நாகை மாவட்டம் பனங்குடியில் பொதுத்துறை சி.பி.சி.எல். நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் ஆன்லைனில் 2ம் கட்ட விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பனங்குடி, முட்டம், நரிமணம், உத்தமசோழபுரம், கோபுராஜபுரம் ஆகிய 5 ஊராட்சிகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இவற்றை பொருட்படுத்தாமல் 600 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில் சி.பி.சி.எல். நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 40 கிராமங்களில் கருப்பு கொடி கட்டிய விவசாயிகள், வாகன விழிப்புணர்வு பேரணியும் நடத்தினர். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் ரசாயன தொழிற்சாலைகள் அமைத்தால் விவசாயம் அழிந்துவிடும் என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதை நிறுத்த வேண்டும் எனவும் கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.

Related Stories:

More
>