×

ஒகேனக்கல் நீர்வரத்து வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

தருமபுரி: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழையால் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் ஒகேனக்கல்லுக்கு நேற்று வினாடிக்கு 20,000 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று காலை நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து 24,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல்லில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஐந்தருவி மெயினருவி, சிலிஃபால்ஸ் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

ஒகேனக்கல்லில் தண்ணீர் ஆர்பரித்துள்ளதால் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தமிழ்நாடு கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 19,068 கனஅடியில் இருந்து 28,394 கனஅடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 85.17 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் நீர்இருப்பு 47.30 டிஎம்சியாக இருக்கிறது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்திற்கான நீர்திறப்பு 650 கனஅடியிலிருந்து 550 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

Tags : Okanagan , hogenakkal
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 90 கனஅடி