×

வால்பாறையில் கனமழை காட்டருவிகளில் வெள்ளப்பெருக்கு: சின்னக்கல்லாரில் 128 மி.மீ. பதிவு

வால்பாறை: வால்பாறையில் மற்றும் அட்டகட்டி பகுதியில் விடிய விடிய சூறைக்காற்று மழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பட்டது. ஆழியார் முதல் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் தொடரும் மழையால் கடும் குளிர், மூடுபனி நிலவுகிறது. இடைவிடாது பெய்து வரும் மழையால் வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் நீர் வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சோலையாறு, நடுமலையாறு, இட்லியாறு உள்ளிட்ட ஆறுகளில் நீர் அதிகரித்து காணப்படுகிறது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி அதிகபட்சமாக சின்னக்கல்லாரில் 128 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. கீழ் நீராறு 92, வால்பாறை 85, சோலையார் அணை 86, வாட்டர் பால்ஸ் 64 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.



Tags : Valparai ,Chinnakallar , Heavy rain in Valparai Flooding in the wilds: 128 mm in Chinnakallar. Registration
× RELATED கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது