×

அஜய் மிஸ்ராவை ஒன்றிய அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்காதவரை விசாரணை நியாயமாக நடக்க வாய்ப்பில்லை : எம்.பி. ராகுல் காந்தி பேட்டி

டெல்லி : டெல்லி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவரை ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் குழு சந்தித்துள்ளது. லக்கிம்பூரில் கார் ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்டது தொடர்பாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் ராகுல்காந்தி முறையிட்டார் லக்கீம்பூர் கேரி விவகாரம் தொடர்பாக ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கடந்த சனியன்று உத்தரப்பிரதேச போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தலைமையிலான 7 பேர் கொண்ட காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்துள்ளது. காங்கிரஸ் பிரதிநிதிகள் கூட்டத்தில் கார்கே, மூத்த தலைவர்கள் ஏகே அந்தோனி, குலாம் நபி ஆசாத், மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, ப்ரியங்கா காந்தி மற்றும் கேசி வேணுகோபால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அப்போது ஒன்றிய உள்துறை இணை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஜனாதிபதியிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ப்ரியங்கா காந்தி,லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை விவகாரம் தொடர்பாக  இன்றே ஒன்றிய அரசுடன் கலந்துரையாடுவதாக ஜனாதிபதி தங்களுக்கு உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, லக்கிம்பூர் விவகாரம் தொடர்பாக ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவியில் இருக்க நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். லக்கிம்பூர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம்.அஜய் மிஸ்ராவை ஒன்றிய அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்காதவரை விசாரணை நியாயமாக நடக்க வாய்ப்பில்லை.உச்சநீதிமன்ற நீதிபதிகள் 2 பேர் லக்கிம்பூர் விவகாரத்தை விசாரிக்கவும் கோரிக்கை வைத்துள்ளோம்,என்றார்.


Tags : Ajay Mishra ,Union Minister ,Rahul Gandhi , ராகுல் காந்தி ,ராம்நாத் கோவிந்த்
× RELATED சொல்லிட்டாங்க…