அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படாத பெரியகுளம், திருமலைக்குளம் கண்மாய்: குடிமராமத்து செய்ய விவசாயிகள் கோரிக்கை

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே சுந்தரபாண்டியத்தில் பெரியகுளம், திருமலைக்குளம் ஆகிய இரண்டு கண்மாய்கள் உள்ளன. பெரியகுளம் கண்மாய் 450 ஏக்கரும், திருமலைக்குளம் கண்மாய் 350 ஏக்கர் வரை பாசன வசதி கொண்டது. இந்த 2 கண்மாய்களுக்கும் பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளிலிருந்து தண்ணீர் வரும். கடந்த அதிமுக ஆட்சியில் இந்த கண்மாய்கள் மற்றும் வரத்து கால்வாய்களில் குடிமராமக்கு பணிகள் நடக்காததால், கருவேலம் மரங்கள் அடர்ந்து வளர்ந்து புதா் மண்டிக் கிடக்கிறது. இதனால், அணையிலிந்து வரும் தண்ணீர் நீர்வரத்து கால்வாய்கள் மூலம் கண்மாய்களை அடையாது வீணாகி வருகிறது. இதனால், விவசாயம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் சுப்புராஜ், துர்க்கையாண்டி ஆகியோர் கூறியதாவது: தீர்த்தக்கால் அணைக்கட்டில் நிரந்தரமாக மதகு அமைத்து தடுப்பணையை உயர்த்திக் கட்டி பெரியகுளம் கண்மாய்க்கு வரவேண்டிய விவசாயத்திற்கான நீரை முறையாக பகிர்ந்து அளிக்க வேண்டும். தீர்த்தக்கால் அணையிலிருந்து ஆலங்குளம் கண்மாய் வரை உள்ள பாசன கால்வாயை சீர்செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்வரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.

மேலும் பெரியகுளம் கண்மாய்க்கு பன்னிக்குளம் கண்மாய் கலிங்களில் இருந்து வரும் நீர்வழிப்பாதையில் உள்ள கருவேலம் மரங்களை அகற்றி நீர்வழிப்பாதையை சீரமைக்க வேண்டும் என கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 10 ஆண்டுகளாக முறையிட்டு வந்தோம். ஆனால், ஒரு நடவடிக்கையும் இல்லை. எனவே, பெரியகுளம் கண்மாய் மற்றும் திருமலைக்குளம் ஆகிய கண்மாய்களில் குடிமராமத்து பணிகளை செய்ய வேண்டும், என்றனர்.

Related Stories:

More
>