×

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தது : தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு!!

சென்னை : கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தமிழ்நாடு அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 1,289 ஆக பதிவாகியுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 80 ஆயிரத்து 857 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று  18 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 814 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 29ஆயிரத்து 201ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 1300-க்கும் கீழாக 1289 என்ற அளவுக்கு குறைந்திருக்கிறது. சென்னையில் 164 ஆக குறைந்திருக்கிறது. தொடர்ந்து 17 -ஆவது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவது நிச்சயமாக நிம்மதியளிக்கும் செய்தியாகும்!. தமிழக அரசும், மருத்துவத் துறையினரும் மேற்கொண்ட நடவடிக்கைகள், அதிக அளவில் போடப்பட்ட தடுப்பூசிகள் தான் இதற்கு காரணம். முகக்கவசம் அணிந்து இதற்கு ஒத்துழைத்த  மக்களும் இதற்கு காரணம். இவர்கள் பாராட்டத்தக்கவர்கள். அனைவரின் பணியும், ஒத்துழைப்பும் தொடர வேண்டும்! என்று பதிவிட்டுள்ளார்.


Tags : Tamil Nadu ,Pamaka ,Ramdas ,Tamil Nadu government , பாமக ,நிறுவனர் ,ராமதாஸ், பாராட்டு
× RELATED தேர்தல் அலுவலகம் திறக்க முடியாமல்...