தமிழ்நாட்டில் தமிழுக்கே முதன்மை என்போம் : மதுரை எம். பி. சு. வெங்கடேசன் பெருமிதம்!!

சென்னை : தமிழ்விலக்கம் எங்கேனும் நிகழக் கண்டால் தாய்ப்புலியாய்ச் சீறி யெழுந்துஎம் உரிமை மீட்போம் என்று மதுரை எம். பி. சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மதுரை நாடாளுமன்ற  உறுப்பினர் சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அஞ்சலக படிவங்களை தமிழில் அச்சடிப்பதற்கான உத்தரவும், அச்சாகவுள்ள தமிழ் படிவங்களின் மாதிரியும்!  தமிழ்நாட்டில் தமிழுக்கே முதன்மை என்போம் தளர்வின்றி எந்நாளும் அதனைக் காப்போம்!! தமிழ்விலக்கம் எங்கேனும் நிகழக் கண்டால்

தாய்ப்புலியாய்ச் சீறி யெழுந்துஎம் உரிமை மீட்போம்!!! என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக அஞ்சல் துறையில் பணவிடை தமிழில் அச்சடிக்கப்பட்டு வந்த நிலையில் தமிழ் மொழி நீக்கம் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மதுரை எம்.பி. சு. வெங்கடேசன்,   இந்தி பேசாத மாநிலங்களில் மாநில மொழிகளில் சேவையை தருவது ஒன்றிய அரசு நிறுவனங்களின் கடமை ஆகும். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன். சாதாரண குடிமகன் வழக்கு விவரங்களை தெரிந்து கொள்ளும் சூழல் உருவாக்கப்படும் முறைமை மீது நம்பிக்கையை உருவாக்கும் என்பதே அவர் கருத்தின்  சாரம். எனவே வாடிக்கையாளர் சேவை தொடர்பான எல்லா வடிவங்களும் பணவிடை சேமிப்புக்கான பணம் செலுத்துதல் மற்றும் எடுத்தல் ஆகிய படங்கள் உட்பட தமிழில் இருப்பதையும் அதற்கேற்ற தொழில்நுட்ப ஏற்பாட்டை இணைய வழியில் தருவதையும் உறுதி செய்ய வேண்டுகிறேன் உடனடியாக நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன் என்று  கூறி மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.  தற்போது அஞ்சலக படிவங்களில் தமிழ்மொழி சேர்க்கப்பட்டுள்ளது இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற  உறுப்பினர் சு. வெங்கடேசன் இவ்வாறு ட்வீட் செய்துள்ளார்.

Related Stories:

More
>