×

மக்களிடையே அமைதி, சகோதரத்துவம், ஒற்றுமை ஏற்பட கடவுளைப் பிரார்த்திக்கிறேன் :குடியரசுத்தலைவர் துர்கா பூஜை தின வாழ்த்து!!

டெல்லி : துர்கா பூஜையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: துர்கா பூஜை தின நன்னாளில் நாட்டு மக்களுக்கும் வெளிநாட்டில் வசிக்கும் சக குடிமக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். துர்கா தேவி சக்தியின் அடையாளம் மற்றும் மகளிர் சக்தியின் தெய்வீக வடிவமாகும். துர்கா பூஜை என்பது தீமையை அழித்து வெற்றியைக் கொண்டாடுவது ஆகும். துர்கா தேவியின் ஒன்பது வடிவங்கள் வாழ்க்கை மற்றும் இயற்கையின் சங்கமம் ஆகும்.

துர்கா பூஜை பண்டிகையின் போது பெண்களுக்கு உயரிய மரியாதை மற்றும் தேசத்தைக் கட்டமைப்பதில் சமபங்களிப்பு உடைய சமுதாயத்தை உருவாக்க தீர்மானிப்போம்.துர்கா பூஜை பண்டிகையின் போது மக்களிடையே அமைதி, சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமை ஏற்பட நான் கடவுளைப் பிரார்த்திக்கிறேன். நமது தேசத்தின் சேவை மற்றும் முன்னேற்றத்திற்காக நம்மை அர்ப்பணிப்போம் என்று குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

Tags : God ,Durga ,Puja ,President , அமைதி, சகோதரத்துவம், ஒற்றுமை ,குடியரசுத்தலைவர்
× RELATED எதற்காக இறைத்தூதர்கள்?