ஐபிஎல் போட்டியில் சூதாட்டம்? சென்னையில் ஒருவர் கைது

சென்னை: சென்னையில் ஆன்லைன் விளையாட்டு போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த ஹரிகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான ஹரிகிருஷ்ணன் ஐபிஎல் போட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டாரா என சைபர் கிரைம் போலீஸ் விசாரணை நடத்துகின்றனர். மாமல்லபுரம் ராடிசன் புளூ ஓட்டலில் கைதானவரிடம் இருந்து 193 கிராம் தங்கம், ரூ.24.68 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 6 கிலோ வெள்ளி பொருட்கள், 10 செல்போன்கள், 1 ஐபேட், 1 லேப்டாப்பையும் போலீஸ் பறிமுதல் செய்தது. ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.87 லட்சம் கட்டி ஏமாந்த சூளைமேடு விக்னேஷ் புகாரின் பேரில் போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கேசினோ, லைவ் ஸ்போர்ட்ஸ் பெயரில் இணையத்தில் சூதாட்டத்தில் ஹரிகிருஷ்ணன் ஈடுபட்டு வந்துள்ளார். தந்தையைபோல் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஹரிகிருஷ்ணன் கிரிக்கெட் போட்டி சூதாட்ட தரகராகவும் இருந்துள்ளார்.

Related Stories:

More