×

ஊரக உள்ளாட்சி தேர்தல்; விடிய விடிய வாக்கு எண்ணிக்கை; திமுக அமோக வெற்றி; 929 இடங்களில் திமுக முன்னிலை

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. அதிகாலை 5 மணி வரையிலான நிலவரப்படி திமுக பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது. 140 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 136 இடங்களில் திமுக முன்னிலை வகிக்கிறது. 5 இடங்களில் மட்டுமே அதிமுக முன்னிலையில் உள்ளது. 1381 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 929 இடங்களில் திமுக முன்னிலை வகிக்கிறது. அதிமுக 132 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. செங்கல்பட்டு மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் திமுக 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 6 இடங்களில் திமுக முன்னிலையில் உள்ளது. 5 மாவட்டங்களில் மாவட்ட கவுன்சிலர் பதவிகள் முழுவதையும் திமுக கைப்பற்றியது. நெல்லை மாவட்டத்தில் 122 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக கூட்டணி 91 இடங்களில் முன்னிலையில் உள்ளது. திமுக கூட்டணியில் திமுக 83, காங்கிரஸ் 6, மார்க்சிஸ்ட் 1, விசிக தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி தற்போது வரை நடந்து வருகிறது.. இன்று அதிகாலை 5 மணி வரையிலான நிலவரப்படி திமுக பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது. அதிமுக தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது. 138 மாவட்ட கவுன்சிலர், 1,375 ஒன்றிய கவுன்சிலர், 2,779 கிராம ஊராட்சி தலைவர், 19,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு கடந்த 6 மற்றும் 9 தேதிகளில் இரு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது, 74 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

Tags : In-house , Rural local elections, counting of votes, DMK, victory
× RELATED காஞ்சிபுரம் ஊரக உள்ளாட்சி தேர்தலில்...