நிலத்தை அபகரித்ததாக கூறி இலங்கை தமிழர் தீக்குளிக்க முயற்சி: நத்தம் தாசில்தார் ஆபீசில் பரபரப்பு

நத்தம்: நிலத்தை அபகரித்ததாக கூறி நத்தம் தாசில்தார் அலுவலகத்தில் இலங்கை அகதி ஒருவர் குடும்பத்துடன் டீசல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கீழ்ப்புத்துபட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் மனோரஞ்சிதம் (50). இவரது பெயரிலும், இவரது சகோதரர் பெயரிலும் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே மணக்காட்டூரில் நிலம் உள்ளது. இந்நிலத்தை அருகிலுள்ள வீராச்சாமி, தங்கம் (எ) பொன்னையா ஆகியோர் அபகரித்ததாக கூறப்படுகிறது.

மனோரஞ்சிதம் தங்களது நிலத்தை கோர்ட்டு உத்தரவுப்படி பலமுறை கோரிக்கை வைத்தும் வருவாய் துறையினர் முறையாக அளந்து தரவில்லை என தெரிகிறது. இதனால் அதிருப்தியடைந்த மனோரஞ்சிதம் குடும்பத்தினருடன் நேற்று நத்தம் தாசில்தார் அலுவலகத்திற்கு வந்து, டீசலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரை சிகிச்சைக்காக திண்டுக்கல் ஜிஹெச்சிற்கு அனுப்பி வைத்தனர். நிலத்தை அபகரித்ததாக கூறி இலங்கை அகதி ஒருவர் குடும்பத்துடன் வட்டாட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் நத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

More