நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை தே.பா. சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: எஸ்பியிடம் காங்கிரசார் மனு

நாகர்கோவில்: ராஜேஷ்குமார் எம்எல்ஏ தலைமையில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணனிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்டம் தக்கலையில் கடந்த 10ம் தேதி நடைபெற்ற நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியை சேர்ந்த துரைமுருகன், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை கொலை செய்தது போல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரையும் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருக்கிறார்.

அவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அந்த ஆர்ப்பாட்டத்தில் அக் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர் மற்றும் காளியம்மாள் ஆகியோர்,  பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசியுள்ளனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் ஒருங்கிணைப்பாளர் சீமான் தூண்டுதலின் பேரில் நடைபெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்களை கொலை செய்து விடுவேன் என மிரட்டிய நாம் தமிழர் கட்சியினர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Related Stories:

More
>