×

ஐகோர்ட்டுக்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகளை நியமனம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 75. தற்போது 55 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். 20 இடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்துக்க புதிய நீதிபதிகளை நியமிப்பதற்கான பட்டியலை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தலைமையிலான கொலீஜியம் சமீபத்தில் அனுப்பியது.
இதை பரிசீலித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய கொலீஜியம், வக்கீல்கள் சுந்தரம் ஸ்ரீமதி, டி.பரத சக்கரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷபிக் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, இந்த 4 வக்கீல்களை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நியமனம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. புதிய நீதிபதிகள் விரைவில் பதவியேற்பார்கள். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது.

Tags : iCourt , Appointment of 4 new judges to the iCourt
× RELATED 2021-ல் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில்...