ரவுடி வெட்டிக்கொலை

திருவொற்றியூர்: மணலி எடப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குட்டி (எ) ராஜசேகர் (26), ரவுடி. இவர், சின்னசேக்காடு பார்த்தசாரதி 6வது தெருவில் நேற்று முன்தினம் இரவு, மணலியை சேர்ந்த சதீஷ்குமார் (32), இவரது சகோதரர் விக்னேஷ் (30) ஆகியோருடன் மது அருந்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் சதீஷ்குமார், விக்னேஷ் ஆகியோர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜசேகரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர். இதில் தலை, முதுகு போன்ற இடங்களில் பலத்த வெட்டு காயமடைந்த ராஜசேகர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமார், விக்னேஷை கைது செய்தனர்.

Related Stories:

More
>