×

புனித தோமையார் மலை ஒன்றிய தேர்தலில் பெரும்பாலான ஊராட்சிகளை திமுக கைப்பற்றியது

சென்னை: புனித தோமையார் மலை ஒன்றியத்துக்கு உட்பட்ட 15 ஊராட்சிகளின் வாக்கு எண்ணும் பணி நேற்று கிழக்கு தாம்பரம், பாரதமாதா சாலையில் உள்ள ஜெயகோபால் கரோடியா நேஷனல் பள்ளியில் நடைபெற்றது. இதில், கவுல்பஜார் ஊராட்சி தலைவர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட அனிதா 1,203 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
* திரிசூலம் ஊராட்சி தலைவர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட உஷா 4458 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வார்டு உறுப்பினர் தேர்தலில், 1வது வார்டில் சேகர், 2வது வார்டில் மாரியம்மாள், 3வது வார்டில் கனி, 4வது வார்டில் பூவம்மாள், 5வது வார்டில் கீதாராணி, 6வது வார்டில் மாரியம்மாள், 7வது வார்டில் அமுதா 8வது வார்டில் சத்தியநாராயணன், 9வது வார்டில் ராஜேந்திரன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
* பொழிச்சலூர் ஊராட்சி தலைவர் தேர்தலில்  திமுக சார்பில் போட்டியிட்ட வனஜா 5,233  வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
வார்டு உறுப்பினர் தேர்தலில் 1வது வார்டில் செல்வி, 2வது வார்டில் வீரராகவன், 3வது வார்டில் அற்புதம், 4வது வார்டில் ஜோசப், 5வது வார்டில் அபிராமி முனுசாமி, 6வது வார்டில் உமா மகேஸ்வரி, 7வது வார்டில் ஷர்மிளா, 8வது வார்டில் சுரேஷ், 9வது வார்டில் கார்த்திக், 10வது வார்டில் சுந்தரம், 11வது வார்டில் நாகராஜன், 12வது வார்டில் ஆனந்தவள்ளி, 13வது வார்டில் மாரி பியூலா, 14வது வார்டில் செல்வராஜ், 15வது வார்டில் பிரியா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
* புனித தோமையார் மலை ஒன்றியத்தின் மாவட்ட ஊராட்சி 1வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட ஜாய் செல்வகணி 9,699 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
2வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட சவுமியா 5,086 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
* மூவரசம்பட்டு ஊராட்சி தலைவர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ஜி.கே.ரவி, அதிமுக வேட்பாளர் பக்தவச்சலத்தை விட அதிக ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். வார்டு உறுப்பினர் தேர்தலில் 1வது வார்டில் லதா சந்திரன் (விசிக), 2வது வார்டில் பெருமாள் (திமுக), 3வது வார்டில் விஜயா (அதிமுக), 4வது வார்டில் கிரண் ராஜ் (திமுக), 5வது வார்டில் விக்டோரியா (திமுக),  6வது வார்டில் சதீஷ் (திமுக), 7வது வார்டில் எபனேசர் ரெஜிலா (சுயேட்சை), 8வது வார்டில் உமா (திமுக), 9வது வார்டில் லாவண்யா (திமுக), 10வது வார்டில் சுகுமார் (திமுக), 11வது வார்டில் ராஜேந்திரன் (சுயேட்சை), 12வது வார்டில் பிரகாஷ் (திமுக) ஆகியோர் வெற்றி பெற்றனர். முடிச்சூர், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், மேடவாக்கம், வேங்கைவாசல், சித்தாலப்பாக்கம், பெரும்பாக்கம், திருவஞ்சேரி, அகரம்தென், மதுரபாக்கம், ஒட்டியம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் வாக்குகள் தொடர்ந்து எண்ணும் பணி நடைபெற்றது. இதில், திமுக முன்னிலை வகித்தது.


Tags : DMK ,St. Thomas Hill Union election , The DMK won most of the panchayats in the St. Thomas Hill Union election
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி