தேனி, மதுரையில் போக்குவரத்து அலுவலர் வீடுகளில் அதிரடி ரெய்டு

தேனி: தேனியில் வட்டார போக்குவரத்துக்கழக அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்குச் சொந்தமான மதுரை வீட்டிலும் ரெய்டு நடந்தது. தேனி வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலகத்தில், நேர்முக உதவியாளராக இருப்பவர் முரளிதரன் (55). இவர், பணி நிமித்தமாக என்ஆர்டி நகரில் வீடு எடுத்து தங்கியுள்ளார். மேலும், மதுரை திருநகரில் சொந்த வீடு உள்ளது. இவர் கடந்த 2018ல் தொழில்நுட்பமல்லாத ஆய்வாளராக பணிபுரிந்தபோது, வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஒரு வழக்கு போடப்பட்டது.

அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தேனியில் முரளிதரன் தங்கியிருந்த வீட்டிலும், தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும், முரளிதரனின் வாகனத்திலும் நேற்று திடீர் சோதனை செய்தனர். இந்த சோதனை சுமார் 5 மணி நேரம் நீடித்தது. இதேபோல மதுரை திருநகரில் உள்ள அவரது வீட்டிலும், சென்னையில் முரளிதரனுக்கு வேண்டியவர் வீட்டிலும் சோதனை நடந்ததாக தெரிவித்துள்ளனர்.

Related Stories:

More
>