வடிவேலு படத்தை போல் எல்லா சின்னத்திலும் ஒரு குத்து

விழுப்புரம்: உங்கிட்ட வாங்குன காசுக்கு உனக்கு ஒரு குத்து. அவங்கிட்ட வாங்குன காசுக்கு அவனுக்கு ஒரு குத்து என வடிவேலு பட பாணியில் காணை ஊராட்சியில் எல்லா சின்னத்திலும் ஒரு குத்து குத்திய வாக்காளர் பற்றி சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் மாவட்ட கவுன்சிலருக்கு பதிவான வாக்குகளை ஒவ்வொரு சீட்டாக எடுத்து வேட்பாளர்கள், அவர்களின் முகவர்களிடம் காண்பித்து பெட்டியில் போடப்பட்டது. அதில் ஒரு வாக்குச் சீட்டில், வாக்காளர் ஒருவர் மொத்தமுள்ள 6 சின்னங்களில் 4 சின்னங்களில் முத்திரையை பதிவு செய்திருந்தார். இதனை பார்த்த வேட்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அந்த வாக்குச் சீட்டு செல்லாததாக அறிவிக்கப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டன. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பலரும் இதுபற்றி சமூகவலைதளங்களில் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Related Stories:

More
>