பிஎம் கேர்ஸ் அறக்கட்டளை வழக்கு.! பிரதமர் படத்தை அகற்றுவது குறித்து ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும்: மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு

மும்பை: கொரோனா பரவல் தொற்று காலத்தில் பொதுமக்களுக்கு நிவாரண நிதி வழங்குவதற்காகவும், கொரோனா கட்டுப்பாடு பணிகளுக்கு பயன்படுத்துவதற்காகவும் பிஎம் கேர்ஸ் நிதி டிரஸ்ட் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் இந்த டிரஸ்டின் இணையதளத்தில் பிரதமர் மோடியின் புகைப்படம், சின்னம், தேசியக்கொடி இடம்பெற்றுள்ளது. பிஎம் கேர்ஸ் நிதி டிரஸ்ட் இணைய தள பக்கத்தில் இருந்து பிரதமரின் புகைப்படம் உள்ளிட்டவற்றை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விக்ராந்த் சவான் என்பவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏஏ சையத் மற்றும் எஸ்ஜி டிஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, ‘பிஎம் கேர்ஸ் நிதி டிரஸ்ட் இணையத்தில் இடம்பெற்றுள்ள பிரதமரின் புகைப்படம், தேசியக்கொடி உள்ளிட்டவை அகற்றுவது தொடர்பாக ஒன்றிய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு 26ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Related Stories: