×

சீனாவில் வெள்ளத்தில் சிக்கி 15 பேர் பலி

பெய்ஜிங்: சீனாவில் பெய்த தொடர் மழையினால்  ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர். சீனாவின் பெரும்பாலான மாகாணங்களில் முன் எப்போதும் இல்லாத வகையில் கடந்த வாரத்தில் 5 நாட்களாக தொடர் கனமழை பெய்தது. ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே வாரத்தில் பெய்துள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   இந்த நிலையில், அந்நாட்டின் வடக்கே ஷான்ஜி மாகாணத்தில் கடந்த கடந்த வாரம் பெய்த மழையினால் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால், 17.5 லட்சம் பேர் பாதித்துள்ளனர்.  1.20 லட்சம் பேர் வேறு பாதுகாப்பான இடங்களுக்கு புலம்பெயர்ந்தனர்.

19,000 கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. 18,000 கட்டிடங்கள் முற்றிலும் சேதமடைந்தன. ஷான்ஜியில் பெய்த தொடர்ச்சியான மழை, சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்து உள்ளனர்.  3 பேர் காணாமல் மாயமானதாக மாகாண அரசு தெரிவித்துள்ளது. சீனாவின் ஷான்ஜி, ஹூபெய், சிசுவான் மாகாணங்களில் கோடைகாலத்தில் பெய்த மழையினால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறினர். இதில் ஷான்ஜியில் அக்டோபர் முதல் வாரத்தில் பெய்த மழை வழக்கமான சராசரி அளவை விட மூன்று மடங்கு அதிகமாக பெய்துள்ளது.

Tags : China , Floods kill 15 in China
× RELATED சீனா, தாய்லாந்தில் இருந்து வரும் வெஸ்டர்ன் ஃப்ராக்ஸ்