×

தமிழக பெண்ணுக்கு சிங்கப்பூர் அரசு மனிதநேய விருது

துபாய்: சிங்கப்பூரில் ஆண்டுதோறும்  மத நல்லிணக்கம், இளைஞர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பல்வேறு தன்னார்வ பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு ஜனாதிபதியால் விருது வழங்கப்படுகிறது. இவ்வாண்டும் அதற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு தனி நபர்கள் மற்றும் அமைப்புகள் உள்ளிட்ட 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் சிங்கப்பூரில் வசித்து வரும் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நஷ்ஹத் பஹீமா என்ற பெண்ணுக்கு சிறந்த மனித நேய பணிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகை இஸ்தானாவில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யாகூப் விருது  வழங்கி பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சி  தேசிய தன்னார்வு மற்றும் தொண்டு மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. இது குறித்து விருது பெற்ற‌ பஹீமா கூறியதாவது, ‘விருது பெற்றது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இன, மத வேறுபாட்டை களைந்து அனைத்து மக்களிடம் நல்லிணக்கம் தொடர்ந்து நிலைத்திட பணியாற்றுவேன்’ என தெரிவித்தார்.

Tags : Tamil Nadu , Government of Singapore Humanitarian Award for Tamil Nadu Woman
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...