உள்நாட்டு விமானசேவை கட்டுப்பாடுகள் நீக்கம்: விமான போக்குவரத்து துறை அறிவிப்பு

புதுடெல்லி: கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக உள்நாட்டு விமானங்களில் பயணிகள் எண்ணிக்கைக்கு அவ்வப்போது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்தது. கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததை அடுத்து பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. கடந்த ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஜூலை 5ம் தேதி வரை 50 சதவீத பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். ஜூலை 5ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை 65% பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் வரும் 18ம்  தேதி முதல் பயணிகள் எண்ணிக்கையில் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி விமானங்களை இயக்குவதாக விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,‘‘வரும் 18ம் தேதி முதல் உள்நாட்டு விமானங்கள் எந்தவித பயணிகள் கட்டுப்பாடும் இன்றி வழக்கம்போல் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories:

More
>