×

கோவாவில் ஜெயித்தால்... டெல்லியை பிடிச்சுடலாம்: தேர்தல் பொறுப்பாளர் ப.சிதம்பரத்தின் புது கணக்கு

பனாஜி: கோவாவில் ஆட்சியை பிடிக்கும் கட்சி, மத்தியில் ஆட்சியை பிடிக்கும் என்று, கட்சியினரை குஷிப்படுத்துவதற்காக அம்மாநில காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் ப.சிதம்பரம் பேசினார். கோவா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்தாண்டு ெதாடக்கத்தில் மாநில சட்டப் பேரவை தேர்தல்கள் நடக்கவுள்ளன. அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ள நிலையில், கோவா காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த சில வாரங்களுக்கு முன் நியமிக்கப்பட்டார்.

கோவா மாநில பாஜக ஆட்சியை வீழ்த்த, காங்கிரஸ் கட்சி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இந்நிலையில், கோவா காங்கிரஸ் தேர்தல் பணிக்குழுக் கூட்டம் பனாஜியில் நடந்தது. அப்போது ப.சிதம்பரம் பேசுகையில், ‘கோவா சட்டப் பேரவை தேர்தலில் எந்த கட்சி வெற்றிப் பெற்று ஆட்சி அமைக்கிறதோ, அந்த கட்சித்தான் அடுத்து வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றிபெறும். கடந்த 2007ம் ஆண்டு கோவாவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அப்போது, காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியை பிடித்தது.

அதே 2012ம் ஆண்டு கோவா தேர்தலில் தோல்வியடைந்தோம். அதனால், 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில்  தோல்வியடைந்தோம். இந்த முறை, கோவா தேர்தலில் வெற்றி பெற்றோம் என்றால், டெல்லியை (ஒன்றிய அரசு) பிடித்துவிடலாம்’ என்றார். இருப்பினும், 1999ம் ஆண்டு நடந்த கோவா பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிப் பெற்றது. ஆனால், மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியை பிடித்தது. அதேபோல், 2002ம் ஆண்டில் முதன் முறையாக மாநிலத்தில் பாஜக ஆட்சியை பிடித்தது.

அதன்பின் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சியை இழந்தது. ஆனால், ப.சிதம்பரம் முரணான தகவல்களை கட்சியினர் முன் தெரிவித்துள்ளதாக சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் கூறுகையில், ‘கோவா காங்கிரஸ் கட்சியினரை குஷிப்படுத்துவதற்காக, கோவாவில் ஆட்சியை பிடிப்பவர்கள், மத்தியில் ஆட்சியை பிடிப்பார்கள்’ என்று ப.சிதம்பரம் பேசியதாக அவர்கள் தெரிவித்தனர்.

Tags : Goa , If he wins in Goa ... Delhi can be captured: Election Commissioner P. Chidambaram's new account
× RELATED தேர்தல் விதிமுறையை மீறி அண்ணாமலை...