×

ராமேஸ்வரம் மீனவர்களின் வேலைநிறுத்த போராட்டம் 4வது நாளாக இன்று நீடிப்பு

ராமேஸ்வரம்: உற்பத்தி விலையில் மீன்பிடிபடகுகளுக்கு டீசல் வழங்க வலியுறுத்தி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் ஒரு வார காலம் கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தம் செய்கின்றனர். 4வது நாளாக இன்றும் போராட்டம் தொடர்ந்தது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுக கடற்கரையில் மீனவர் பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சேசுராஜ் தலைமை வகித்தார். சகாயம், எமரிட் உட்பட மீனவர் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், விசைப்படகு மோதி இலங்கை மீனவர் படகு கடலில் மூழ்கிய சம்பவங்கள் வரும்காலத்தில் நடக்காத வகையில் இலங்கை கரையோரத்தில் விசைப்படகுகள் மீன்பிடிக்கக்கூடாது.

இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும். கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் நலன் கருதி உற்பத்தி விலையிலேயே மீன்பிடி படகுகளுக்கு டீசல் வழங்கவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக்.15 தேதி வரை ஒரு வார காலம் கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தம் போராட்டம் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதன்படி கடந்த இரு தினங்களுக்கு முன் வேலைநிறுத்த போராட்டம் துவங்கியது. 4வது நாளாக இன்றும் போராட்டம் தொடர்ந்தது. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (அக்.13)ம் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.


Tags : Rameswaram , Rameswaram fishermen strike continues for 4th day today
× RELATED ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை...