சிவகங்கை மாவட்டம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம் 3வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. இதில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சானாவயல் முத்துராமன் 1712 வாக்குகள் பெற்றார். இவர், அதிமுக வேட்பாளரை விட 1323 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இதேபோல், காளையார்கோவில் ஒன்றியம் 6வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் கந்தசாமி, அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜ வேட்பாளர் அழகுராஜாவை விட கூடுதலாக 780 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

Related Stories:

More
>