×

உஷார் மக்களே!: திருச்சி மாவட்டத்தில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்...இதுவரை 37 பேர் பாதிப்பு..!!

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், இதுவரை 37 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர் வனிதா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா  படிப்படியாக குறைந்து வரும் நிலையில் டெங்கு காய்ச்சல் வேகம் எடுத்து வருகிறது . இந்தியாவில் 11 மாநிலங்களில் டெங்கு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு டெங்கு வைரஸ் புதிய மாற்றத்தை அடைந்திருப்பதே  காரணம் என்று சொல்லப்படுகிறது.

அத்துடன் டெங்கு மற்றும் கொரோனா இரண்டிற்குமான அறிகுறிகளைக் கண்டறிவது சிரமமாக இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் டெங்குவால் இதுவரை 342 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாக டாக்டர் வனிதா தெரிவித்துள்ளார். மேலும் டெங்கு காய்ச்சலுக்கென மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிரத்யேக வார்டுகள் தயார் நிலையில் இருப்பதாகவும் டாக்டர் வனிதா குறிப்பிட்டுள்ளார். 10 நாட்களுக்கு முன்னதாகவே ஏற்பாடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இன்றைய நிலவரப்படி 4 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அதில் 3 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்புகின்றனர். ஒருவருக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் டாக்டர் வனிதா குறிப்பிட்டிருக்கிறார். காய்ச்சல், சளி, இருமல், தொண்டை புண், மூச்சு விடுவதில் சிரமம், தலைவலி, சோர்வு ஆகிய  அறிகுறிகள் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளாகும். இதனால் பொதுமக்கள் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெச்சரிக்கையாக செய்வது என்பது நல்லது.

Tags : Trichy district , Trichy, Dengue fever, 37 people affected
× RELATED திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் குரூப்...