×

பிஎன்பி பாரிபாஸ் ஓபன் டென்னிஸ்: ஸ்வார்ட்ஸ்மான், காஸ்பர் ரூட் 3வது சுற்றில் வெற்றி

இண்டியன்வெல்ஸ்: பிஎன்பி பாரிபாஸ் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அர்ஜென்டினாவின் டீகோ ஸ்வார்ட்ஸ்மான் மற்றும் நார்வே வீரர் காஸ்பர் ரூட் உட்பட முன்னணி வீரர்கள் 3ம் சுற்றில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள இண்டியன்வெல்சில், முன்னணி டென்னிஸ் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அனைவரும் மோதும் பிஎன்பி பாரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் பரபரப்பாக நடந்து வருகின்றன.

தற்போது மகளிர் ஒற்றையர் பிரிவில் 3ம் சுற்றுப் போட்டிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. ஆடவர் ஒற்றையர் பிரிவில் 3ம் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன. கோர்ட் நம்பர் 1ல் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவில் நடந்த 3ம் சுற்றுப் போட்டியில் அர்ஜென்டினாவின் டீகோ ஸ்வார்ட்ஸ்மானும், இங்கிலாந்தின் அனுபவம் வாய்ந்த வீரர் டான் இவான்சும் மோதினர். இதில் முதல் செட்டை 7-5 என இவான்ஸ் கைப்பற்றினார். இருப்பினும் அடுத்த 2 செட்களை ஸ்வார்ட்ஸ்டமான் 6-4, 6-0 என கைப்பற்றி, இவான்சை வீழ்த்தினார்.

மற்றொரு 3ம் சுற்றுப்போட்டியில் நார்வேயின் இளம் நட்சத்திரம் காஸ்பர் ரூடும், தென்னாப்பிரிக்காவின் முன்னணி வீரர் லாயிட் ஹாரிசும் மோதினர். இதில் முதல் செட்டை டை பிரேக்கரில் 7-6 என்ற கணக்கில் ஹாரிஸ் கைப்பற்றினார். ஆனால் அடுத்த 2 செட்களையும் 6-4, 6-4 என எளிதாக கைப்பற்றி, காஸ்பர் ரூட் 4ம் சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் ரஷ்யாவின் அஸ்லான் காரட்சேவ், கனடாவின் டெனிஸ் ஷபோவலோவை 7-5, 6-2 என நேர் செட்களில் வீழ்த்தி, அதிர்ச்சியளித்தார்.

இத்தாலியின் ஜானிக் சின்னர், பல்கேரிய வீரர் கிரிகோர் டிமிட்ரோவ் ஆகியோரும் 3ம் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்துள்ளனர்.

Tags : BNP Baribas Open Tennis ,Swartzman ,Caspar Root , BNP Baribas Open Tennis: Swartzman, Caspar Root win 3rd round
× RELATED பிஎன்பி பாரிபாஸ் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் நிஷிகோரி, டியாஃபோ வெற்றி