கொடைக்கானலில் ராமநாதபுரம் வாலிபர் அருவியில் விழுந்து பலி-உடலை தேடும் பணி தீவிரம்

கொடைக்கானல் : ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் அருண் (24). இவர் தனது நண்பர்கள் 10 பேருடன் நேற்று முன்தினம் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார்.

கொடைக்கானல் பெருமாள்மலை அடுத்த பேத்துப்பாறை பாரதி அண்ணா நகரில் உள்ள ஓராவி அருவியில் நேற்று காலை நண்பர்களுடன் அருண் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அருவியில் தவறி விழுந்து அருண் பலியானார்.

இதுபற்றி நண்பர்கள் கொடைக்கானல் போலீசார், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான அருணின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்தை ஆர்டிஓ முருகேசன் நேரில் பார்வையிட்டு மீட்பு பணியை விரைவுபடுத்த உத்தரவிட்டார். சுற்றுலா வந்த இடத்தில் அருவியில் தவறி விழுந்து வாலிபர் பலியானது அவரது உறவினர்கள், நண்பர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

More