ஆச்சாம்பட்டி அரசு பள்ளியில் உலக பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்

திருக்காட்டுப்பள்ளி : தஞ்சாவூர் மாவட்டம் ஆச்சாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் உலக பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா தலைமையாசிரியர் வெங்கடாஜலபதி தலைமையில் நடந்தது. அவர் பேசுகையில், பெண்கள் பாதுகாப்பு பற்றியும் பெண்குழந்தைகள் இந்த நாட்டின் தேவதைகள் எனவும் கூறினார். பெண் குழந்தைகளின் பாதுகாப்பு சட்டங்கள் பற்றி விளக்கி உறுதிமொழியும் எடுத்து கொண்டனர்.

பள்ளி சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ராஜேஸ்வரி உலக வரலாற்றில் வெற்றி பெற்ற பெண்மணிகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்து கூறினார். பள்ளி ஆசிரியர்கள் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவிகள் அனைவருக்கும் ரோஜா பூ வழங்கி வாழ்த்தினர். பட்டதாரி ஆசிரியர் மற்றும் ஜெஆர்சி இணை கன்வீனர் பாலமுருகன் பெண்கள் சாதனைகள், போக்சோ சட்டம் போன்ற விழிப்புணர்வு சட்டம் பற்றி பேசி நன்றி கூறினார்.

Related Stories:

More
>