×

கோத்தகிரியில் ஹெத்தையம்மன் கோவிலை அறநிலைத்துறை எடுப்பதை கண்டித்து கொட்டும் மழையில் படுகர் இனமக்கள் உண்ணாவிரத போராட்டம்-கலாசார பாட்டு, ஒப்பாரி பாடி எதிர்ப்பு

கோத்தகிரி : கோத்தகிரி அருகே பெத்தளா கிராமத்தில் குலதெய்வமான ஹெத்தையம்மனை படுகர் இன மக்கள் ஆண்டாண்டு காலமாக வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்து அறநிலையத்துறை இந்த கோயிலை தங்கள் கட்டுப்பாட்டில் எடுப்பதற்காக அறிவிப்பு பலகை வைத்து உள்ளனர்.  இதனால் கிராம மக்கள் கொதிப்படைந்தனர். பின்பு முதற்கட்டமாக நேற்று இந்து  அறநிலையத்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து இதற்கு உறுதுணையாக இருந்த நடுஹட்டி கைகாரு தலைவர் நஞ்சன் என்பவரை உடனடியாக  பதவியிலிருந்து விலக கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மழையையும் பொருட்படுத்தாமல் கொட்டும் மழையில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். மேலும் கலாசார பாடல்களை பாடி உண்ணாவிரதம் மேற்கொண்டனர். ஒரு சில  பெண்கள் மயங்கி விழுந்தனர்.பெண்கள் ஒப்பாரி வைத்து  தங்களது கலாசாரத்தை சீரழிக்கும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரியும், இந்து அறநிலையத்துறை உடனடியாக பாரம்பரிய கோயிலை மீட்பு நடவடிக்கையை கைவிடுமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Oppari Padi ,Hettaiyamman ,Kotagiri , Kotagiri: In the village of Bethala near Kotagiri, the people of the Padukkar tribe have been worshiping the deity Hettaiyamman for years.
× RELATED கோத்தகிரி சுற்றுவட்டாரங்களில் இதமான காலநிலை நிலவுகிறது