கோடப்பமந்து கால்வாயில் ரூ.5.40 கோடியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி துரித கதியில் நடக்கிறது

ஊட்டி : ஊட்டி நகராட்சியில், 36 வார்டுகள் உள்ளன. இதில், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஊட்டி நகராட்சியில் அனைத்து வார்டுகளில் கழிவு நீர் செல்லும் வகையில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஊட்டி நகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பாதாள சாக்கடை குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவைகள், கோடப்பமந்து கால்வாயில் செல்லும் பிரதான குழாயுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த குழாய் வண்ணாரப்பேட்டை முதல் சுமார் 2 கி.மீ. தொலைவில் காந்தல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்துடன் இணைக்கிறது.

இதில், 1.5  கி.மீ. தூரத்திற்கு மேல் கோடப்பமந்து கால்வாயின் உட்புறத்தில் குழாய்கள் செல்கிறது. இந்த குழாய்கள் அமைத்து பல ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது குழாய்கள் அனைத்தும் உடைந்து குழாய்களில் அடைப்பு ஏற்பட்டது.இதனால், கழிவு நீர் திறந்த வெளியில் ஓடும் அவலம் ஏற்பட்டது. மேலும், இந்த கழிவு நீர் நேரடியாக ஊட்டி ஏரியில் கலக்கும் நிலை இருந்தது. இதனால், இதனை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகள் மேற்கொண்டது.

இதனை தொடர்ந்து இந்த குழாய்களை சீரமைக்க ரூ.5.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான நிதி கடந்த பல மாதங்களுக்கு முன் ஒதுக்கப்பட்ட போதிலும், கொரோனா பாதிப்பு மற்றும் மழை காரணமாக பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்தது. இதனால், மீண்டும் கழிவு நீர் திறந்த வெளியில் கோடப்பமந்து கால்வாயில் செல்லும் அவலம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, கால்வாய் மற்றும் குழாய்கள் அமைக்கும் பணிகளை வேகப்படுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகம் கான்ட்ரக்டர்களுக்கு அழுத்தம் கொடுத்தது.

இதனை தொடர்ந்து, தற்போது கழிவு நீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகிறது. தற்போது மத்திய பஸ் நிலையம் முதல் டவுன் பஸ் நிலையம் வரையில் இந்த குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அதன் மீது கான்கிரீட் கலவை கொண்டு மூடப்பட்டுள்ளது.ஊட்டியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. எனினும், விரைந்து முடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள்  தெரிவித்

தனர்.

Related Stories: