அதிமுக ஆட்சியில் கடைசியில் போட்டது நான்கு மாதம்கூட தாங்காத சாலை-மழையால் சேதமடைந்தது

திருப்புவனம் : திருப்புவனம் அருகே நான்கு மாதங்களுக்கு முன் அதிமுக ஆட்சியின் இறுதியில் போடப்பட்ட கிராமச்சாலை சமீபத்தில் பெய்த மழைக்கு சேதமடைந்துள்ளது.

திருப்புவனம் அருகே தேளி விலக்கு ரோட்டிலிருந்து கணக்கன்குடி வரை 3 கிமீ தூரம் பல லட்சம் செலவில் கடந்த அதிமுக ஆட்சியின் கடைசியில் அவசர கதியில் சாலை போடப்பட்டது. இந்த சாலை தற்போது பெய்த மழையால் பல இடங்களில் சேதமாகி உள்ளது. சிறுபாலம் முறையாக போடாததால் சேதமாகி உள்ளது.

சாலையின் இரு ஓரங்களிலும் கொட்டப்பட்ட மண்ணை பரத்திவிடாமல் கிடப்பதால், அந்த மண் மழையில் கரைந்து தார் ரோடு மண் ரோடாக மாறிவிட்டது என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே பணிகளை அரைகுறையாக மேற்ெகாண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories:

More
>