உளுந்தூர்பேட்டை வனத்தோட்டக்கழக மண்டல மேலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் வனத்தோட்டக்கழக மண்டல மேலாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத 34 லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்திருக்கும் நிலையில் மேலாளர் நேசமணியின் புதுக்கோட்டை வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. உளுந்தூர்பேட்டை வனத்தோட்டக்கழக மண்டல மேலாளராக பணியாற்றி வந்த நேசமணியிடம் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் 34 லட்சத்து 65 ஆயிரம் கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்தனர்.

நேற்று இரவு முதல் விடிய விடிய அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் இன்று அவரது சொந்த ஊரான புதுக்கோட்டை கொட்டையாகர தெருவில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை முதலே புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி இமயவர்மன் மற்றும் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கணக்கில் வராத பணம் ஏதும் வைக்கப்பட்டுள்ளதா? ஆவணங்கள் ஏதும் சிக்குகிறதா? என்று சோதனை முழுமையாக முடிந்த பின்பே கைப்பற்றப்பட்ட முழுமையான தகவல் தெரியவரும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து காலையில் இருந்து 5 மணி நேரத்திற்கு மேலாக போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

More
>