×

வாழ்க்கை முழுவதும் மக்கள் சேவைக்காக அர்ப்பணித்தவர் ராஜமாதா விஜய ராஜே சிந்தியா : பிரதமர் மோடி புகழாரம்!!

டெல்லி : ராஜமாதா விஜய ராஜே சிந்தியா அவர்களின் பிறந்த நாளில் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.குவாலியரின் ராஜமாதா என்று பிரபலமாக அழைக்கப்படும் பாஜக மூத்த தலைவர் விஜய ராஜே சிந்தியா மத்தியப்பிரதேச மாநிலம் சாகரில் 1919ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ம் தேதி அன்று பிறந்தார்.  கல்வி பயின்ற பிறகு அவர், சுதந்திரப் இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட விஜய ராஜே சிந்தியா நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

விஜய ராஜே சிந்தியா 1957 முதல் 1998 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். பெண்களுக்கு அதிக அதிகாரம் வழங்குவது உட்பட பல்வேறு சமூகப் பணிகளில் பங்கேற்றார் என்பதோடு, கல்வி மூலமாக பெண்களின் வாழ்க்கை முறையை உயர்த்துவதை நோக்கமாக கொண்ட பல்வேறு அமைப்புகளில் அவர் பணியாற்றினார். விஜய ராஜே சிந்தியா 2001ம் ஆண்டு ஜனவரி மாதம் 25ம் தேதி அன்று காலமானார்.

இந்த நிலையில், ராஜமாதா விஜய ராஜே சிந்தியா அவர்களின் பிறந்த நாளில் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ராஜமாதா விஜய ராஜே சிந்தியா அவர்களின் பிறந்த நாளில் அவருக்குப் புகழ்மொழிகள். அவரது வாழ்க்கை முழுவதும் மக்கள் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. அவர் துணிச்சலானவர், அன்பானவர். மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள ஒரு கட்சியாக பிஜேபி வளர்ந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் ராஜமாதா அவர்களைப்போன்ற அர்ப்பணிப்பு மிக்க தலைவர்கள் மக்களிடையேயும் கட்சியை வலுப்படுத்தவும் செய்த பணிகளாகும்” என்று பிரதமர் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு, மறைந்த பாஜக மூத்த தலைவர் விஜய ராஜே சிந்தியாவின் நினைவாக 100 ரூபாய் மதிப்பிலான நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Rajamata Vijaya Raje Cynthia ,Modi , விஜய ராஜே சிந்தியா,பிரதமர் நரேந்திர மோடி ,புகழாரம்
× RELATED சொல்லிட்டாங்க…