மாவோயிஸ்ட் விவகாரம் தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை..!!

சிவகங்கை: மாவோயிஸ்ட் விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. கேரள மாநிலத்தில் கடந்த வாரம் மாவோயிஸ்ட்  ஒருவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழக, கேரள, ஆந்திர மாநிலங்களில் அவருக்கு தொடர்புடைய 23 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக கோவையில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்களாக அறியப்படும் புளியங்குளம் பகுதியில் உள்ள மருத்துவர் தினேஷ் என்பவர் வீட்டிலும், சுங்கம் பகுதியில் உள்ள டேனிஸ் என்பவரது வீட்டிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளார்கள். இதேபோல் பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி பகுதியில் உள்ள சந்தோஷ் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. கோவை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் என்ஐஏ சோதனை நடந்து வருகிறது. மாவோயிஸ்ட் காளிதாஸ் கேரள சிறையில் இருக்கும் நிலையில் சிவகங்கை அண்ணாமலை நகரில் உள்ள அவரின் சகோதரர் சிங்காரம் வீட்டில் சோதனை நடைபெறுகிறது.

Related Stories: