×

பெங்களூரில் கொட்டி தீர்க்கும் கனமழை!: வெள்ளக்காடாக மாறிய கேம்பகவுடா விமான நிலையம்... பயணிகள் கடும் அவதி..!!

பெங்களூரு: பெங்களூரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கேம்பகவுடா சர்வதேச விமான நிலையத்திற்குள் மழைநீர் புகுந்தது. இதனால் விமானப்பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பெங்களூரின் வடக்கு பகுதியில் நேற்று காலை முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. சுரங்க பாதைகளில் மழைநீர் அதிகளவில் தேங்கி நின்றதால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். நகரின் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. நகரில் உள்ள பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்து வருகிறது.

மேலும் பழமையான வீடுகள், சுவர்களும் இடிந்து விழுந்து வருகின்றன. குறிப்பாக கேம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தை மழைநீர் சூழ்ந்ததால் விமானப்பயணிகள் வெளியேற முடியாமலும் உள்ளே செல்ல முடியாமலும் தவித்தனர். அப்பகுதியில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. இதனால் விமானத்தை பிடிக்க டிராக்டர் மூலம் செல்லும் நிலைக்கு பயணிகள் ஆளாகினர். விமான நிலையத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் நீரில் நீந்தி சென்று சேதமடைந்தன. மேலும் சில நாட்களுக்கு அப்பகுதியில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Tags : Bangalore , Bangalore, Heavy Rain, Kempegowda Airport
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...