×

ஜி.எஸ்.டி.யில் 5%, 12% வரி விகிதங்களை 1% உயர்த்த ஒன்றிய அரசு திட்டம்

டெல்லி: ஜி.எஸ்.டி.யில் குறைந்தபட்ச வரி விகிதங்களை உயர்த்த ஒன்றிய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரியில் நடைமுறையில் உள்ள 4 வரி அடுக்குகளை 3ஆக குறைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கான முன்னெடுப்பாக குறைந்தபட்ச 2 அடுக்குகளின் வரி விதிப்பை 1% உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி 5% வரி அடுக்கு 6%ஆகவும், 12% வரி அடுக்கு 13%ஆகவும் உயர்த்தப்பட பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநில நிதியமைச்சர்கள் அடங்கிய குழு இதற்கான முன் மொழிதலை அடுத்த மாதம் இறுதியில் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. டிசம்பர் மாதத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி கவுன்சில் கூடி இதுகுறித்து விவாதிக்க உள்ளது.

Tags : U.S. government , GST
× RELATED அமெரிக்க அரசு செலவினங்களுக்கான நிதி...