×

கர்நாடக மாநிலம் கலபுர்கி நகரில் திடீர் நிலநடுக்கம்!: அச்சத்தில் வீதிகளில் தஞ்சமடைந்த பொதுமக்கள்..!!

பெங்களூரு: கர்நாடக மாநிலம் கலபுர்கி நகரில் நேற்று இரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் வீதிகளில் தஞ்சமடைந்தனர். கலபுர்கி நகரில் நேற்று இரவு சுமார் 9:30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கலபுர்கி நகர பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கியதால் அச்சமடைந்த பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு வீதிகளில் திரண்டனர். ரிக்டர் அளவுகோளில் நில அதிர்வு 4.1 ஆக பதிவாகியுள்ளது என்று தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கத்தால் அண்டை மாநிலத்தின் எல்லையோர மாவட்டமான கலபுர்கி நகரில் நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 11 நாட்களில் 4வது முறையாக கர்நாடகாவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். மாவட்டத்தின் பல இடங்களில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் வெளியாகவில்லை. கடந்த ஞாயிற்றுகிழமை கர்நாடகாவின் குல்பர்கா நகரில் காலை 6 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 3.4 ஆக பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Kalaburgi ,Karnataka , Karnataka, Kalaburagi, earthquake
× RELATED கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா..!!