ஜி-20 நிதி அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க நிர்மலா சீதாராமன் அமெரிக்கா பயணம்

புதுடெல்லி: ஜி-20 மாநாடு, உலக வங்கி, சர்வதேச நிதிய கூட்டங்களில் பங்கேற்பதற்காக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 4 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். சர்வதேச வரிவிதிப்பு முறையில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக இந்தியா உள்பட 136 நாடுகள் பங்கேற்கும் ஜி-20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டம் நாளை நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அரசு முறைப் பயணமாக 4 நாட்கள் அமெரிக்கா சென்றார். இது தொடர்பாக ஒன்றிய நிதி அமைச்சகம் வெளியிட்ட டிவிட்டரில், `சர்வதேச நிதியம், உலக வங்கி, ஜி-20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டங்களின் ஆண்டு இறுதி கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார். இந்த அரசு முறைப் பயணத்தின் போது, இந்தியா-அமெரிக்கா பொருளாதாரம், நிதி சார்ந்த பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வார்,’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: