சபரிமலை தரிசனம் ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்

திருவனந்தபுரம்: பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருட மண்டல கால பூஜைகளுக்காக நவம்பர் 16ம் தேதி கோயில் நடை திறக்கப்படுகிறது. இதை ஒட்டி முதல் கட்டமாக தினமும் 25 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தரிசனத்திற்கு கண்டிப்பாக ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் அல்லது கொரோனா ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று இரவு முதல் தொடங்கியுள்ளது.

Related Stories:

More